Paristamil Navigation Paristamil advert login

ஜிம்பாப்வேக்கு எதிரான படுதோல்வி குறித்து அசலங்கா

ஜிம்பாப்வேக்கு எதிரான படுதோல்வி குறித்து அசலங்கா

7 புரட்டாசி 2025 ஞாயிறு 09:03 | பார்வைகள் : 125


ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் படுதோல்வியடைந்ததன் காரணத்தை சரித் அசலங்கா குறிப்பிட்டார்.

 

ஹராரேயில் நடந்த 2வது டி20 போட்டியில் இலங்கை அணி 80 ஓட்டங்களுக்கு சுருண்டது.

 

பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி 14.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 84 ஓட்டங்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 

 

முதல் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, இரண்டாவது போட்டியில் படுதோல்வியடைந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்தது.

 

போட்டிக்கு பின்னர் பேசிய இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்கா (Charith Asalanka),

 

"பவர்பிளேயில் நாங்கள் அதிக விக்கெட்டுகளை இழந்தோம், நாங்கள் விரும்பிய தொடக்கம் அல்ல. நான் துடுப்பாட்டம் செய்யும்போது 130-140 சுற்றில் ஸ்கோர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அது ஒரு துடுப்பாட்ட களமாக இல்லை. எனினும் நாங்கள் சிறப்பாக துடுப்பாட்டம் செய்திருக்கலாம். இந்த வடிவத்தில் 80 ஓட்டங்கள் என்பது போதாது" என்றார்.

 

இலங்கை, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடக்கிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்