Paristamil Navigation Paristamil advert login

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய டிஜிட்டல் எல்லை திட்டம்...

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய டிஜிட்டல் எல்லை திட்டம்...

7 புரட்டாசி 2025 ஞாயிறு 09:03 | பார்வைகள் : 330


ஐரோப்பிய ஒன்றியத்தின் EES எனப்படும் புதிய டிஜிட்டல் எல்லை திட்டம் இந்த இலையுதிர்காலத்தில் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த திட்டமானது பாதுகாப்பை வலுப்படுத்தவும், பயணத்தை எளிதாக்கவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டத்தில் இணைய மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிடும் என்ற கவலையும் எழுந்துள்ளது.

 

புதிய EES திட்டமானது ஐரோப்பியரல்லாத குடிமக்கள் ஷெங்கன் பகுதிக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் போது கண்காணிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 29 ஐரோப்பிய நாடுகளுக்கும் பொருந்தும்.

 

ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் 29 உறுப்பு நாடுகளிலும் எவ்வித எல்லைக் கட்டுப்பாடுகளும் இன்றி பயணிக்க முடியும். அக்டோபர் 12 முதல் குறைந்த எண்ணிக்கையிலான வணிகப் பயணிகள் மட்டுமே புதிய முறையைப் பயன்படுத்த அழைக்கப்படுவார்கள்.

 

 

அடுத்த மாதங்களில் அதிகமான பயணிகள் இதைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுவார்கள். ஏப்ரல் 10, 2026 க்குள் பங்கேற்கும் 29 நாடுகளிலும் உள்ள ஒவ்வொரு ஷெங்கன் எல்லைக் கடக்கும் இடத்திலும் EES செயலில் இருக்க வேண்டும்.

 

பிரித்தானியர்கள் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர்கள் அல்லாத பயணிகள் அனைவரும் முதலில் பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்யும் போது பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும்.

 

ஒவ்வொரு பாஸ்போர்ட்டையும் ஸ்கேன் செய்து, பின்னர் கைரேகைகள் மற்றும் புகைப்படத்தை பதிவு செய்ய வேண்டும். யூரோஸ்டார் அதன் லண்டன் செயிண்ட் பான்க்ராஸ் முனையத்தைச் சுற்றியுள்ள மூன்று பகுதிகளில் 49 EES கியோஸ்க்குகளை நிறுவியுள்ளது.

பிரித்தானியர்கள் உட்பட ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளின் குடிமக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைய விசா தேவையில்லை. பயணம் செய்வதற்கு முன் அங்கீகாரத்திற்காக ஒன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பத்திற்கு 20 யூரோ கட்டணம் வசூலிக்கின்றனர். இது 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். 18 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க வேண்டும், ஆனால் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்