இரு வீரர்கள் உபாதையில்.. திணறும் பிரெஞ்சு உதைபந்தாட்ட அணி!!

7 புரட்டாசி 2025 ஞாயிறு 13:50 | பார்வைகள் : 5046
Dembélé மற்றும் Doué ஆகிய இரு பிரெஞ்சு உதைபந்தாட்ட வீரர்கள் உபாதைக்குள்ளாகியுள்ளதால், பிரெஞ்சு உதைபந்தாட்ட தேசிய அணி சிக்கலுக்குள் உள்ளது.
இரு வீரர்களும் 6 தொடக்கம் 8 வாரங்கள் (அல்லது இரண்டு மாதங்கள்) ஓய்வில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. இருவரும் கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்ற பிரான்ஸ் யுக்ரேன் அணிகளுக்கிடையிலான சுற்றுப்போட்டியில் உபாதைக்குள்ளாகியிருந்தனர்.
இரு வீரர்களும் PSG அணியில் விளையாடி வரும் நிலையில், இருவரும் தேசிய போட்டிகளில் கலந்துகொள்ள முடியாத நிலை உள்ளதாக PSG கழகம் தேசிய கழகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், saison de Ligue 1 போட்டிகளில் அவர்கள் இருவரும் தொடர்ந்து விளையாடுவதில் சிக்கல் உள்ளதாகவும், தேசிய அணி விளையாட உள்ள போட்டிகளிலும் இருவரும் விளையாடுவதில் சிக்கல் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது