Paristamil Navigation Paristamil advert login

Hyundai Creta Electric, i20, Alcazar கார்களின் Knight Edition அறிமுகம்

Hyundai Creta Electric, i20, Alcazar கார்களின் Knight Edition அறிமுகம்

7 புரட்டாசி 2025 ஞாயிறு 18:32 | பார்வைகள் : 164


Hyundai நிறுவனம் அதன் Creta Electric, i20 மற்றும் Alcazar கார்களின் Knight Edition-களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த கார்கள் கருப்பு நிற அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, மேலும் மேம்பட்ட தோற்றத்தையும் சாலையில் சிறப்பான கவனத்தையும் ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

Creta Electric-ன் Exellence வகையில் Knight கிடைக்கிறது.

இதில், 510 கி.மீ. வரை பயணிக்க கூடிய 51.4kWh பேட்டரி மற்றும் 420 கி.மீ. பயணிக்கக்கூடிய 42kWh பேட்டரி கொண்ட வகைகள் உள்ளன.

 

Hyundai i20 Knight

1.2 லிட்டர் Kappa பெட்ரோல் எஞ்சின் கொண்ட Hyundai i20 Sportz (O) 5-speed Manual Transmission மற்றும் Hyundai i20 Asta (O) IVT Transmission ஆகிய இரண்டு வகைகளில் Knight வேரியன்ட் கிடைக்கிறது.

 

Hyundai Alcazar Knight

Alcazar-ன் 1.5L Turbo GDi Petrol Engine (7 Speed DCT) மற்றும் 7 இருக்கைகளைக் கொண்ட 1.5L U2 CRDi Diesel engine (6 Speed Automatic transmission) வகைகளில் Knight வேரியன்ட் கிடைக்கிறது.

Knight Edition கார்களில், கருப்பு அலாய் வீல், சிகப்பு பிரேக் கேலிபர், Matte Black Hyundai லோகோ, Knight சின்னம், Brass நிற உள்ளமைப்பு, உலோக Paddle-கள் போன்ற பல சிறப்பு அம்சங்கள் கொடுக்கப்படுகின்றன.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்