Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் 300 தென் கொரிய பணியாளர்கள் கைது

அமெரிக்காவில் 300 தென் கொரிய பணியாளர்கள் கைது

7 புரட்டாசி 2025 ஞாயிறு 18:32 | பார்வைகள் : 210


தென் கொரிய தொழிலாளர்களை பத்திரமாக மீட்க அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக அந்நாட்டு அரசு தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தில் நடைபெற்ற திடீர் சோதனையில் தென் கொரிய வீரர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.

அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு ஹூண்டாய் ஆலையில் நடத்திய சோதனையின் போது கைது செய்யப்பட்ட 475 ஊழியர்களில் 300 பேர் தென் கொரிய நாட்டவர்கள் ஆகும்.

இவர்களிடம் முறையான விசா மற்றும் பணிபுரிய அனுமதிக்கும் ஆவணங்கள் இல்லாததால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவினர் நடத்திய இந்த சோதனையை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நியாயப்படுத்தினார்.

இந்நிலையில் அவர்களை பத்திரமாக மீட்க தென் கொரிய அரசு அமெரிக்காவுடன் முக்கிய ஒப்பந்தம் மேற்கொண்டு இருப்பதாக ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டு ஜனாதிபதியின் தலைமை அதிகாரி காங் ஹூன்-சிக் தெரிவித்துள்ளார்.

இன்னும் சில நிர்வாக நடைமுறைகள் மீதம் இருப்பதால், அவை நிறைவடைந்த உடனே தென் கொரிய தொழிலாளர்கள் பத்திரமாக தாய் நாடு திரும்ப விமானங்கள் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்