Paristamil Navigation Paristamil advert login

இந்தியா நியமித்துள்ள ஆலோசகர் அமெரிக்க அதிபருடன் சந்திப்பு

இந்தியா நியமித்துள்ள ஆலோசகர் அமெரிக்க அதிபருடன் சந்திப்பு

8 புரட்டாசி 2025 திங்கள் 13:06 | பார்வைகள் : 160


அமெரிக்கா - இந்தியா இடையிலான வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இதில் தீர்வு காண்பதற்காக, மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசகர் ஜேசன் மில்லர், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து பேசியுள்ளார்.

இறக்கு மதி பொருட்களுக்கான 50 சதவீத வரி விதிப்பால், இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதை மீட்டெடுக்கும் முயற்சியில் இரு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன.

இந்த சூழலில், ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலின் போது, இந்தியாவின் நிலைப்பாடுகள் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எடுத்துரைப்பதற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த ஜேசன் மில்லர், இந்தியாவுக்கான அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து டிரம்ப் மற்றும் அவரின் அரசு அதிகாரிகளுக்கு இவர் ஆலோசனைகளை வழங்குவார்.

இந்நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு சென்ற ஜேசன் மில்லர், சமீபத்தில் அதிபர் டிரம்ப் மற்றும் பல அதிகாரிகளை சந்தித்து பேசினார்.

இது குறித்த புகைப் படங்களுடன் தன் சமூக வலைதள பக்கத்தில் அவர், 'வாஷிங்டனில் பல்வேறு நண்பர்களை சந்தித்து பேசியது, இந்த வாரம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை மாளிகையில் டிரம்ப் மற்றும் அதிகாரிகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. டிரம்ப், உங்களின் சிறந்த பணியை தொடருங்கள் என, தெரிவித்துள்ளார்.

இந்தி யா சார்பில் பணியமர்த்தப்பட்டுள்ள ஜேசன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மூத்த ஆலோசகர் ஆவார். இவர், அமெரிக்க அதிபருக்கான தேர்தலின் போது, டிரம்புக்கு பல ஆலோசனைகளை வழங்கியவர்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்