Paristamil Navigation Paristamil advert login

இன்று - அரசாங்கத்தின் தலையெழுத்து மாறுகிறது...!!

இன்று - அரசாங்கத்தின் தலையெழுத்து மாறுகிறது...!!

8 புரட்டாசி 2025 திங்கள் 06:00 | பார்வைகள் : 4243


 

இன்று செப்டம்பர் 8, திங்கட்கிழமை அரசாங்கத்துக்கு எதிராக "Vote de confiance" எனும் நம்பிக்கை தீர்மான வாக்கெடுப்பு இடம்பெற உள்ளது.

இது தோல்வியில் முடிந்தால், பிரதமர் பிரான்சுவா பெய்ரூ பதவி விலகுவார். இதுவரையான நிலவரப்படி, பிரதமர் மாற்றப்படுவதற்கான சந்தர்ப்பங்களே அதிகமாக உள்ளன. ஜனாதிபதி மக்ரோன் புதிய பிரதமரின் பெயர் பட்டியலை ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் 25 ஆம் திகதி, பிரதமர் பெய்ரூ, ஊடக சந்திப்பு ஒன்றில் 'நம்பிக்கை வாக்கெடுப்பு ஒன்றுக்குச் செல்லப்போகிறேன்!' என தெரிவித்திருந்தார். அதை அடுத்தே இன்று இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு இடம்பெற உள்ளது.

புதிய பிரதமருக்குரிய தேவை உள்ளதா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்