ஹமாஸ்க்கு இதுதான் கடைசி எச்சரிக்கை...! அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

8 புரட்டாசி 2025 திங்கள் 11:09 | பார்வைகள் : 296
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நடந்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஹமாஸ்க்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் மூண்ட நிலையில், ஹமாஸை அழிப்பதாக சபதம் ஏற்ற இஸ்ரேல், காசா மீது தாக்குதலை நடத்தி வருகிறது.
இதில் ஹமாஸ் அமைப்பினர் மட்டுமல்லாமல் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் தலையீட்டின்பேரில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டு பணையக் கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்டனர். பின்னர் மீண்டும் முரண்பாடு எழுந்த நிலையில் காசாவை இஸ்ரேல் தொடர்ந்து தாக்கி வருகிறது.
காசாவிற்கு நிவாரண உதவிகளையும் இஸ்ரேல் தடுத்து வருவதால் மக்கள் பலர் பட்டினி சாவை அடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ,
“எல்லோரும் பணயக்கைதிகள் வீட்டிற்கு வர விரும்புகிறார்கள். எல்லோரும் இந்த போர் முடிவுக்கு வர விரும்புகிறார்கள் . இஸ்ரேலியர்கள் எனது விதிமுறைகளை ஏற்றுக்கொண்டனர். ஹமாஸும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது.
ஏற்றுக்கொள்ளாததால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஹமாஸை எச்சரித்துள்ளேன். இது எனது கடைசி எச்சரிக்கை, இனிமேல் எதுவும் இருக்காது என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025