Paristamil Navigation Paristamil advert login

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக களமிறங்கிய ஸ்பெயின்

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக களமிறங்கிய ஸ்பெயின்

8 புரட்டாசி 2025 திங்கள் 18:18 | பார்வைகள் : 266


பாலஸ்தீனுக்கு ஆதரவாக இஸ்ரேலுக்கு அழுத்தம் ஏற்படுத்தும் வகையில் ஸ்பெயின் திங்கட்கிழமை புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் வெளியிட்ட காணொளி அறிக்கையில், இனி இஸ்ரேலிய ராணுவத்திற்கு எரிபொருள் ஏற்றிச் செல்லும் எந்த கப்பல்களும் தங்கள் நாட்டு துறைமுகத்தில் நுழைய அனுமதி இல்லை என அறிவித்துள்ளார்.

 

அத்துடன், இஸ்ரேலுக்கு ஆயுதங்களை கொண்டு செல்லும் எந்தவொரு விமானமும் தங்களின் வான் பரப்பை பயன்படுத்த கூடாது என்றும் ஸ்பெயின் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், மேற்கு கரை பகுதியில் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட இஸ்ரேலிய குடியேற்றங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் தடை விதிப்பதாக தெரிவித்துள்ளார்.

 

அதே சமயம், காசாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் ஆகியவற்றில் நேரடியாக ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் ஸ்பெயினுக்குள் நுழைய அனுமதி இல்லை என்றும் சான்செஸ் தெரிவித்துள்ளார்.

 

இந்த முடிவு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு அழுத்தம் கொடுக்கும் என்று நம்புவதாகவும் சென்செஸ் குறிப்பிட்டுள்ளார்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்