Paristamil Navigation Paristamil advert login

புகை பிடிக்காதவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வருமா?

புகை பிடிக்காதவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வருமா?

8 புரட்டாசி 2025 திங்கள் 18:13 | பார்வைகள் : 205


உலகளவில் மிகவும் ஆபத்தான நோய்களில் நுரையீரல் புற்றுநோயும் ஒன்றாகும். பல ஆண்டுகளாக புகைப்பிடிப்பவர்களின் நோயாகவே நுரையீரல் புற்றுநோய் பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது புகைப்பிடிக்காதவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களிடையே அதிகளவு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
 

இதற்கிடையில் நுரையீரல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வும் மக்களிடையே அதிகரித்து வரும் நிலையில், இந்நோய் குறித்த சில கட்டுக்கதைகளும் மக்கள் மத்தியில் நிலவுகின்றன. இதனாலேயே பலர் நுரையீரல் புற்றுநோயைக் கண்டறியவும் அதற்கான சிகிச்சைகளையும் தவிர்த்து வருகின்றனர் அல்லது தாமதப்படுத்துகின்றனர். :

புகைப்பிடித்தல் நுரையீரல் புற்றுநோய்க்கான முக்கிய காரணம் என்றாலும், புகைப்பிடிக்காதவர்களும் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர். உண்மை என்னவென்றால், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படும் அதிகமான மக்கள் ஒருபோதும் புகைப்பிடித்ததில்லை. காற்று மாசுபாடு, சிகரெட் பிடிப்பவர்களின் அருகில் இருத்தல், உட்புற சமையல் புகை, மரபியல் மற்றும் ரசாயன வெளிப்பாடுகள் (அஸ்பெஸ்டாஸ் மற்றும் டீசல் வெளியேற்றம் போன்றவை) அனைத்தும் நுரையீரல் புற்றுநோய்க்கான ஆபத்து காரணிகளாகும்.

அப்படியெல்லாம் உறுதியாக கூறிவிட முடியாது. 30 வயதுக்குட்பட்டவர்கள், சில சமயங்களில் வளர் இளம் பருவத்தினர் கூட நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். புகைப்பிடிக்காத இளம் இந்தியர்கள் - குறிப்பாக பெண்கள் - இன்று நுரையீரல் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். நுரையீரல் புற்றுநோய் அல்லது இருமல், மார்பு வலி மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பிற நுரையீரல் பிரச்சினைகள் தொடர்பான எந்த ஒரு எச்சரிக்கை அறிகுறியையும் எந்த வயதிலும் கவனிக்காமல் இருக்க கூடாது.

நுரையீரல் புற்றுநோய் ஒரு "அமைதியான கொலையாளி" என்று அழைக்கப்படுகிறது அதாவது  இந்நோயின் வளர்ச்சி கட்டத்தில் எந்த வெளிப்படையான அறிகுறிகளும் தெரிவதில்லை. உங்களுக்கு அறிகுறிகள் தோன்றும் நேரத்தில், எடுத்துக்காட்டாக அதிக மூச்சுத் திணறல் வரும்போது, புற்றுநோய் ஏற்கனவே முற்றிய நிலையை எட்டியிருக்கலாம். எனவே  நீங்கள் புகைப்பிடிப்பவராகவோ அல்லது அதிக காற்று மாசுபட்ட வாழ்க்கை முறையைக் கொண்டவராகவோ இருந்தால், குறைந்த அளவிலான CT ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

இது மிகவும் பழமையான சிந்தனை. மருத்துவ அறிவியலின் முன்னேற்றங்கள் காரணமாக, நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகள் இப்போது ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ்கிறார்கள். நோயெதிர்ப்பு சிகிச்சை, சிக்கலான அறுவை சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு ஆகியவற்றை இப்போது நாம் பெற்றுள்ளோம்.

நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு பாலினத்தைப் பொறுத்தது அல்ல. உண்மையில், புகைப்பிடிக்காத பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வருவது இப்போது அதிகமாகி வருகிறது. குறிப்பாக காற்று மாசுபாடு அதிகமாகவும், உட்புற காற்றின் தரம் மோசமாகவும் உள்ள நகர்ப்புறங்களிலும் சமையலறைகளில் காற்றோட்டம் குறைவாக உள்ள நாடுகளிலும் பெண்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதேசமயம் பெண்களுக்கு அவர்களின் அறிகுறிகளின் தீவிரத்தை அடையாளம் காண்பதில் சிரமம் இருக்கலாம்.

வர்த்தக‌ விளம்பரங்கள்