Paristamil Navigation Paristamil advert login

ரஷ்யா மீது புதிய தடைகள்! அமெரிக்கா விரைந்த ஐரோப்பிய ஒன்றியத் தூதர்

ரஷ்யா மீது புதிய தடைகள்! அமெரிக்கா விரைந்த ஐரோப்பிய ஒன்றியத் தூதர்

8 புரட்டாசி 2025 திங்கள் 18:18 | பார்வைகள் : 332


ரஷ்யா மீதான தடைகள் குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக ஐரோப்பிய ஒன்றியத் தூதர் டேவிட் ஓ'சல்லிவன் அமெரிக்காவுக்கு செல்கிறார்.

 

உக்ரைன் மீதான பாரிய தாக்குதலையடுத்து, ரஷ்யா மீது புதிய தடைகள் விதிக்கப்படும் என்று டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அச்சுறுத்தினார்.

 

இந்த நிலையில் ட்ரம்ப் அறிவித்த தடைகள் குறித்த பேச்சுவார்த்தையை நடத்த குழு ஒன்றுடன் ஐரோப்பிய ஒன்றியத் தூதர் டேவிட் ஓ'சல்லிவன் அமெரிக்காவுக்கு செல்கிறார்.

 

 

அவர் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் கூட்டங்களை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்தப் பேச்சுவார்த்தை, ரஷ்யாவிற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து அமெரிக்காவுடன் ஒருங்கிணைப்பை இறுக்குவதை நோக்கமாகக் கொண்டதாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

 

முன்னதாக, இந்தியா மீது இரண்டாம் நிலைத் தடைகளை அமெரிக்க விதித்த அதே சமயத்தில், ரஷ்ய எண்ணெயை வாங்கும் நாடுகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அச்சுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்