Paristamil Navigation Paristamil advert login

தினமும் தனியாவை தேநீராக அருந்துவதால் உண்டாகும் நன்மைகள் !!

தினமும் தனியாவை தேநீராக அருந்துவதால் உண்டாகும் நன்மைகள் !!

10 மாசி 2021 புதன் 09:47 | பார்வைகள் : 8735


 தனியா என்ற பெயரால் அழைக்கப்படும் கொத்தமல்லி விதை பற்றி நம்முடைய மருத்துவ குறிப்புகளில் காணப்படுகிறது. வைட்டமின் சி, பொட்டாசியம், மினரல் போன்றவை தனியாவில் மிகுதியாக அடங்கியிருக்கிறது.

 
 
 
தனியா தேநீர் தயாரிக்க:
 
தனியாவை தேநீராக தினமும் அருந்துவது நமக்கு முழுமையான பயன்களை தரும். நீரிழிவு தொந்தரவு இருப்பவர்கள் 10 கிராம் அளவு தனியாவை தண்ணீரில் இரவு ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை அருந்தினால் நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் வரும்.
 
தனியாவை தேநீராக தயாரிக்கையில் 20 தனியாவை இரவு முழுக்க ஊறவைத்து காலையில் அந்த தண்னீரில் தேவையான அளவு தேயிலை, சுக்கு லேசாக சேர்த்து கொதிக்கவைத்து இனிப்புச் சுவைக்காக நாட்டுச்சர்க்கரை, கருப்பட்டி அல்லது தேன் போன்ற ஏதேனும் ஒன்றினைக் கலந்து தேநீராகத் தயாரித்து அருந்தலாம்.
 
பயன்கள்:
 
கொத்தமல்லி விதையை தேநீராக தினமும் காலையில் அருந்தி வரலாம். இதன்மூலம் வயிற்றில் உள்ள வாயுக்களை அகற்றுகிறது. வாயு மட்டுமல்லாது சளி, இருமல், மைக்ரேன் தலைவலி, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை, பித்தக் கிறுகிறுப்பு, சிறுநீரக பாதை நோய்கள் முதலான பல நோய்களை போக்க வல்லது.
 
கொத்தமல்லி விதை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். மேலும் அலர்ஜி சார்ந்த பிரச்னைகள், உடல்வலி, மாதவிடாய் மற்றும் ஹைப்பர் டென்ஷன் பிரச்னைகளுக்கு அருமருந்தாக இருக்கிறது. ஹார்மோன் சமநிலைக்கும் மல்லி விதை உதவி செய்கிறது.
 
இரைப்பை சார்ந்த பிரச்னைகளான அசிடிட்டி, உப்புசம், வாயுத்தொல்லை, வயிற்று வலி, வயிறு எரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது.
 
தனியாவை நீரிழிவு, ரத்த அழுத்தம், புற்றுநோய் பாதிப்பு, ஆஸ்துமா, சளி தொந்தரவு போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் கட்டாயம் தனியா டீ அருந்துவது நல்லது.
 
நாம் தினமும் அருந்துகிற தண்ணீரில் சிறிதளவு தனியாவை போட்டுக் குடித்து வந்தால் குளிர்காலங்களில் ஏற்படுகிற சைனஸ், அலர்ஜி, சளி போன்ற தொந்தரவுகளில் இருந்தும் தப்பிக்கலாம்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்