Paristamil Navigation Paristamil advert login

80,000 பாதுகாப்பு வீரர்கள் குவிப்பு!

80,000 பாதுகாப்பு வீரர்கள் குவிப்பு!

9 புரட்டாசி 2025 செவ்வாய் 06:25 | பார்வைகள் : 2165


நாளை செப்டம்பர் 10 ஆம் திகதி இடம்பெற உள்ள வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் வன்முறைகள் ஏற்படாமல் தடுக்க, ஜொந்தாமினர், காவல்துறையினர், இராணுவத்தினர் என மொத்தம் 80,000 பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட உள்ளனர்.

உள்துறை அமைச்சர் Bruno Retailleau இதனை நேற்று செப்டம்பர் 8, திங்கட்கிழமை அறிவித்தார். “80,000 ஜொந்தாம், பொலிஸார் கடமையில் ஈடுபடுவார்கள்” என அவர் குறிப்பிட்டார். “அனைத்தையும் முடக்குவோம்” எனும் கோஷத்தோடு தொழிற்சங்க ஊழியர்கள் நாளை 10 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பெரும் முடக்கத்துக்கு தயார் ஆக உள்ளனர்.

“நாட்டை முடக்குவதை நாங்கள் சகித்துக்கொண்டு இருக்கமாட்டோம்!” என ஆர்ப்பாட்டத்தில் குதிக்க உள்ளவர்களுக்கு அமைச்சர் எச்சரித்துள்ளார்.

பிரதமர் பெய்ரூ மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு எதிர்க்கட்சிகளுக்கு சாதமாக முடிந்துளதை அடுத்து, நாளை ஆர்ப்பாட்டம் வெற்றிக்கொண்டாட்டமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்