Paristamil Navigation Paristamil advert login

யாழில் பட்டப்பகலில் அதிர்ச்சி - வீதியில் பயணித்த இளைஞன் மீது வாள் வெட்டு

யாழில் பட்டப்பகலில் அதிர்ச்சி - வீதியில் பயணித்த இளைஞன் மீது வாள் வெட்டு

9 புரட்டாசி 2025 செவ்வாய் 11:09 | பார்வைகள் : 242


யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞன் மீது வேன் ஒன்றில் வந்த வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் , அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ,  

கொக்குவில் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை , தனது அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை மிகுந்த சன நெருக்கடி மிக்க கலட்டி பகுதியில் வேன் ஒன்றில் வந்த வன்முறை கும்பல் இளைஞன் மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.

அதனை அடுத்து வீதியில் சென்றவர்கள் காயமடைந்த இளைஞனை மீட்டு , சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

வர்த்தக‌ விளம்பரங்கள்