இஸ்லாமிய பள்ளிவாசலில் - -பன்றித்தலை!!
9 புரட்டாசி 2025 செவ்வாய் 12:05 | பார்வைகள் : 2755
இஸ்லாமிய பள்ளிவாசலின் ஒன்றின் முன்பாக பன்றியின் தலை ஒன்று வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.,
இன்று செப்டம்பர் 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை இச்சம்பவம் Seine-Saint-Denis மாவட்டத்தின் Montreuil நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. இஸ்லாமியர்களின் மத நம்பிக்கைக்கு எதிரான இந்த செயற்பாடு பெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது, காலை 7 மணி அளவில் காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். பள்ளிவாசலின் நுழைவாயிலுக்கு முன்பாக கழுத்து துண்டாக்கப்பட்டு கொல்லப்பட்ட பன்றி ஒன்றின் தலை வைக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்று காலை நேர தொழுகை தடைப்பட்டது. உள்துறை அமைச்சர் உடனடியாகவே அவரது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அத்தோடு விசாரணைகள் ஆரம்பமாகும் எனவும் எச்சரித்துள்ளார்.
”"இது மூர்க்கத்தனமானது, இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, மேலும் இந்த வகையான அவமதிப்பைச் செய்திருக்கக்கூடியவர்களைக் கண்டுபிடிப்போம் ” என அவர் தெரிவித்தார்.


























Bons Plans
Annuaire
Scan