இளையராஜா பாராட்டு விழாவில் விஜய், அஜித் பங்கேற்கிறார்களா?

9 புரட்டாசி 2025 செவ்வாய் 17:23 | பார்வைகள் : 237
தன்னுடைய மாயாஜால இசையால் அனைவரையும் கட்டிப்போட்ட இசைஞானி இளையராஜா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் 1,500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில், 8,500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். 1975-ஆம் ஆண்டு துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப் பயணம் இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
திரையிசை மட்டுமின்றி பல்வேறு தனியிசை படைப்புகளையும் வெளியிட்டுள்ள இளையராஜா, முழு மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசை சிகரத்தையும் தொட்டு சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை படைத்த முதல் தமிழர் மட்டுமல்ல முதல் இந்தியரும் இசைஞானி இளையராஜா தான். இது மட்டுமின்றி ஆசிய நாடுகளைச் சேர்ந்த எவரும் இச்சாதனையை இதுவரை நிகழ்த்தவில்லை.
லண்டனில் சிம்பொனி சாதனை நிகழ்த்தி விட்டு தாயகம் திரும்பிய இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். அதன்படி வரும் 13.9.2025 சனிக்கிழமை அன்று மாலை 5.30 மணியளவில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இன்னிசை நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து இசைஞானி இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சியும் நடைபெறும். இந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை வழங்குகிறார். தொடர்ந்து நடைபெறும் பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையுரை ஆற்றுகிறார். உலக நாயகன் கமல்ஹாசன், எம்.பி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
முடிவில் இசைஞானி இளையராஜா ஏற்புரை நிகழ்த்துகிறார். இந்த விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள். எம்.எல்.ஏ.க்கள் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், திரைக் கலைஞர்கள், திரைத் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தமிழ்த் திரையுலக முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த விழாவில் ரஜினி, கமலை தவிர்த்து நடிகர்கள் சூர்யா, சிவகார்த்திகேயன், கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்களும், நடிகைகளும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகரும், தவெக தலைவருமான விஜய் திமுகவுக்கு எதிராக இருப்பதால் விழாவில் பங்கேற்க வாய்ப்பில்லை. அதே வேளையில் நடிகர் அஜித்குமார் இந்த விழாவில் பங்கேற்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1