Paristamil Navigation Paristamil advert login

கமல் ரஜினி, இணையும் படத்தில் சூர்யா ?

கமல் ரஜினி,  இணையும் படத்தில் சூர்யா ?

9 புரட்டாசி 2025 செவ்வாய் 17:23 | பார்வைகள் : 214


ஆரம்ப காலத்தில் கமல் ஹீரோவாக நடித்த பல படங்களில் காமெடியன் மற்றும் வில்லனாக நடித்திருந்தார் ரஜினிகாந்த் . ஆனால் அதன்பிறகு அவர்கள் இருவரும் கடந்த 45 ஆண்டுகளாக எந்த படத்திலும் இணைந்து நடிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது கூலி படத்தை அடுத்து ரஜினி, கமலை இணைத்து ஒரு படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த படம் தற்போது ரஜினி நடித்து வரும் ஜெயிலர்-2 படத்தை அடுத்து தொடங்கப்படுகிறதா? இல்லை இன்னும் கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்படுமா? என்பது தெரியவில்லை.

இந்த படத்தில் ரஜினி, கமல் மட்டுமின்றி இன்னொரு முக்கிய இளவட்ட நடிகரையும் நடிக்க வைப்பதற்கு திட்டமிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். குறிப்பாக, கமலை வைத்து அவர் இயக்கிய விக்ரம் படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் வேடம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதனால் அந்த வேடத்தை மீண்டும் இந்த படத்தில் கொண்டு வருவதா? இல்லை இன்னொரு நடிகரை இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க வைக்கலாமா என்பது குறித்து அவர் ஆலோசித்து வருகிறார். என்னதான் ரஜினி, கமலுக்கென்று ஒரு பெரிய ரசிகர் வட்டம் இருந்தபோதும் இளவட்ட ஹீரோ ஒருவரும் இருந்தால் இன்னும் படம் பெரிய அளவில் மாஸாக இருக்கும் என்பதினால் இந்த முயற்சியை எடுக்கிறாராம் லோகேஷ் கனகராஜ்.

வர்த்தக‌ விளம்பரங்கள்