Paristamil Navigation Paristamil advert login

ஐபோன் 17 அறிமுகத்திற்கு முன்பு.., iPhone 16 போனின் விலை Flipkart மற்றும் Amazon-ல் குறைப்பு

ஐபோன் 17 அறிமுகத்திற்கு முன்பு.., iPhone 16 போனின் விலை Flipkart மற்றும் Amazon-ல் குறைப்பு

9 புரட்டாசி 2025 செவ்வாய் 17:12 | பார்வைகள் : 175


Flipkart மற்றும் Amazon தளத்தில் iPhone 16 மொடலின் விலை எவ்வளவு குறைந்துள்ளது என்ற விவரங்களை உள்ளே காணலாம்

 

இன்று நடைபெறும் நிகழ்வில் வெளியிடப்படும் iPhone 17 தொடரின் வரிசையில் iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro மற்றும் iPhone 17 Pro Max ஆகியவை அடங்கும்.

 

அடிப்படை மாடலான ஐபோன் 17-ன் ஆரம்ப விலைகள் சுமார் ரூ.79,990 ஆகவும், iPhone 17 Air,-ன் விலை ரூ.99,000 ஆகவும், iPhone 17 Pro- வின் ரூ.1,34,999 ஆகவும், Pro Max- ன் ரூ.1,64,900 ஆகவும் இருக்கலாம்.

 

புதிய அறிமுகத்திற்கு முன்னதாக, ஆப்பிள், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்கள் முந்தைய தலைமுறை மொடல்களின் விலைகளைக் குறைத்து வருகின்றன.

 

 

iPhone 16 128 ஜிபி (8 ஜிபி ரேம்) அமேசானில் ரூ.69,999க்கு கிடைக்கிறது, அதன் அசல் விலை ரூ.79,900 -லிருந்து குறைக்கப்பட்டுள்ளது.

 

பிளிப்கார்ட்டில், அதே மொடல் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது, மேலும் ஐபோன் 15 மாடல் ரூ.74,900க்கு பட்டியலிடப்பட்டுள்ளது, கூடுதல் சலுகைகளுடன் no-cost EMI மற்றும் வங்கி cashback deals போன்றவை மேலும் குறைக்கக்கூடும்.

 

முன்னதாக, ஐபோன் 16 ஐ ரூ.71,399க்கு பிளிப்கார்ட் வழங்கியது. இது 10% தள்ளுபடிக்குப் பிறகு, Axis Bank, SBI, மற்றும் HDFC கார்டு பரிவர்த்தனைகள் மூலம் கூடுதல் கேஷ்பேக் சலுகைகளுடன் இணைக்கப்பட்டது.

 

 

இதில் Axis Bank மற்றும் SBI கிரெடிட் கார்டுகளில் 5 சதவீத கேஷ்பேக் (ரூ. 4,000 வரை) மற்றும் Axis Bank டெபிட் கார்டு மூலம் ரூ. 750 வரை கேஷ்பேக் ஆகியவை அடங்கும்.

 

HDFC வங்கி வாடிக்கையாளர்கள் வெவ்வேறு பரிவர்த்தனைகளில் 8 முதல் 10 சதவீதம் கேஷ்பேக்கைப் பெறலாம், அதிகபட்சமாக ரூ.1,600 நன்மை கிடைக்கும்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்