Paristamil Navigation Paristamil advert login

பாஜக கூட்டணிக்கு மீண்டும் வர தயார்!ஆனால் கண்டிஷன்!

பாஜக கூட்டணிக்கு மீண்டும் வர தயார்!ஆனால் கண்டிஷன்!

10 புரட்டாசி 2025 புதன் 11:05 | பார்வைகள் : 103


தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மீண்டும் கூட்டணிக்கு வர தயார் என்று தெரிவித்துள்ளார். அதேசமயம், அதற்கு ஒரு கண்டிஷனையும் போட்டுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் “நாங்கள் எல்லாம் ஏற்றுக்கொள்ளும் வகையிலான அதிமுக முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் பட்சத்தில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. கூட்டணிக்கு செல்வோம்” எனத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட அதிமுக, தற்போது சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மீண்டும் கூட்டணி வைத்துள்ளது. இந்நிலையில், பாஜக கூட்டணியில் இருந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அணி மற்றும் அமமுக கூட்டணியில் இருந்து வெளியேறின.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது; “செங்கோட்டையனின் நல்ல முயற்சி வெற்றி பெற வேண்டும் என்பது அம்மாவின் தொண்டர்களின் விருப்பம். எந்தத் துரோகத்தை எதிர்த்து அமமுக தோன்றியதோ, அந்த துரோகத்தை ஏற்றுக்கொண்டு நாங்கள் செல்வதற்கு வாய்ப்பில்லை.

வர்த்தக‌ விளம்பரங்கள்