Paristamil Navigation Paristamil advert login

நாட்டின் புதிய பிரதமர் Sébastien Lecornu..!!

நாட்டின் புதிய பிரதமர் Sébastien Lecornu..!!

9 புரட்டாசி 2025 செவ்வாய் 20:17 | பார்வைகள் : 1925


பிரான்சுவா பெய்ரூ பதவி விலகியதன் பின்னர் நாட்டின் புதிய பிரதமராக Sébastien Lecornu நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரான்சின் ஆயுதப்படைகளுக்கான முன்னாள் அமைச்சராக கடமையாற்றியிருந்த Sébastien Lecornu சற்று முன்னர் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். 39 வயதுடைய அவர் Eure நகரைச் சேர்ந்தவராவார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து, இராஜினாமா கடிதத்தை மக்ரோனிடம் இன்று நண்பகல் பிரான்சுவா பெய்ரூ கையளித்திருந்தார். அதை அடுத்து, புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என பல பெயர்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், Castex  பிரதமராக இருந்த போது அவரது அரசாங்கத்தின் கீழ் ஆயுதப்படைகளுக்கான அமைச்சராக இருந்த Lecornu, இன்று செப்டம்பர் 9 ஆம் திகதி பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்