ஏ.ஐ., மூலம் இனி செயற்கை மழை சாத்தியம்; பாலைவன மாநிலத்தில் நடந்த சோதனை வெற்றி

10 புரட்டாசி 2025 புதன் 15:22 | பார்வைகள் : 105
ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி, பல்வேறு துறைகளிலும் எதிரொலித்து வருகிறது. வேலை வாய்ப்புகளை ஏ.ஐ., தொழில்நுட்பம் பறித்துக் கொள்ளும் என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம், மக்கள் நலனுக்கான சில முக்கிய திட்டங்களுக்கும் பயன்படுவது வியக்கத்தக்க வகையில் இருக்கிறது.
ஏ.ஐ., தொழில் நுட்பத்தால் அப்படி ஒரு வியப்பான சம்பவம் பாலைவன மாநிலமான ராஜஸ்தானில் நடந்திருக்கிறது. அதுவும் அம்மாநிலத்திற்கான நீர் ஆதாரத்துக்காக நிகழ்ந்திருக்கிறது.
நம்ப மாட்டார்கள் ராஜஸ்தான் தலை நகர் ஜெய்ப்பூரின் குடிநீர் தேவைக்காக, கடந்த 1876ல் ராம்கர் பகுதியில் பிரமாண்ட ஏரி உருவாக்கப்பட்டது. 15.5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்திருந்த இந்த ஏரியை காக்க, அதன் அருகில் அணையும் கட்டப்பட்டது.
இதன் வாயிலாக நீர் தேக்கப்பட்டு குடிநீர் தேவைக்காக பயன் படுத்தப்பட்டு வந்தது.
கடந்த, 1982ல் கூட, ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக இந்த ஏரியில் படகு போட்டிகள் நடந்ததாக கூறினால், இப்போது யாருமே நம்ப மாட்டார்கள்.
ஏனெனில், அந்த அளவுக்கு இந்த ஏரியும், அணையும் நீர் இல்லாமல் வறண் டு காய்ந்து போய் கிடக்கிறது. பன்கங்கா நதி படுகையில் புற்றீசல் போல பெ ருகிய ஆக்கிரமிப்புகளே அதற்கு காரணம்.
ஏரிக்கு நீர் கொண்டு செல்லும் கால்வாய்கள் அனைத்தும், ஆக்கிரமிப்புகளால் காணாமல் போக, 1999ம் ஆண்டுக்குப் பின் ஏரிக்கு நீர் பாய்வது முற்றிலும் நின்று போனது.
ஆனால், சமீபத்தில் நடந்த ஒரு முக்கியமான ஆய்வு மூலம், மீண்டும் கடல் போல் அணை காட்சி தரும் என, நம்பிக்கை தெரிவித்திருக்கிறார், அம்மாநில வேளாண் துறை அமைச்சர் டாக்டர் கிரோடி லால் மீனா.
வறட்சி வாட்டும் போதெல்லாம், அரசு கையில் எடுக்கும் ஒரு ஆயுதம் செயற்கை மழைப் பொழிவு. அப்படி தான் கடந்த 1, 5, 6, 7 ஆகிய நான்கு நாட்களும் செயற்கை மழைப் பொழிவுக்கான ஆய்வு ராம்கர் நீர்ப்பிடிப்பு பகுதியில் நடத்தப்பட்டது.
பிராந்திய ஆலோசனை கூட்டாளியான ஜென் எக்ஸ் ஏ.ஐ., என்ற நிறுவனத்துடன், 'கம்பெனி எக்ஸல் - 1' என்ற நிறுவனம் கைகோர்த்து இந்த ஆய்வை நடத்தியது.
வழக்கமாக விமானங்கள் மூலமே செயற்கை மழை பொழிவதற்கான விதை துாவப்படும். ஆனால், இம்முறை ஏ.ஐ., தொழில்நுட்ப உதவியுடன், ட்ரோன் எனப்படும், ஆளில்லா சிறிய ரக விமானங்கள் வாயிலாக அதற்கான விதை துாவப்பட்டது.
ராஜஸ்தான் மாநில வேளாண் துறை அமைச்சர் டாக்டர் கிரோடி லால் மீனா, எம்.எல்.ஏ., மகேந்திர பால் மீனா முன்னிலையில், 2,600 அடி உயரத்தில் ட்ரோன்களை பறக்கவிட்டு, அதன் மூலம் விஞ்ஞான ரீதியாக செயற்கை மழைப் பொழிவுக்கான சோடியம் குளோரைடு வேதியியல் பொருள் துாவப்பட்டது.
அரை கிலோ எடையில் துாவி சோதித்து பார்க்கப்பட்ட முதல் முயற்சியிலேயே அணையை சுற்றியுள்ள நீர்ப் பிடிப்பு பகுதிகளில், 0.08 செ.மீ., அளவுக்கு மழை பொழிந்தது. செ யற்கை மழைப் பொழிவு சாத்தியம் என்பதை கண்கூடாக பார்த்த அமைச்சர் கிரோடி லால் மீனா மகிழ்ச்சி அடைந்தார்.
ஆய்வுகள் திருப்திகரமாக இருப்பதால், செயற்கை மழைப் பொழிவுக்கான ஏற்பாடுகளை மும்முரமாக மேற்கொள்வது பற்றி அரசு மற்றும் விஞ்ஞானிக ளுடன் கலந்து பேசி முடி வெடுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளா ர்.
வெள்ளம் தவிர, நீர்ப்பிடிப்பு பகுதியில், கால்வாய் பாய்ந்தோடும் இடங்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளையும் து வங்கப் போவதாக கூறியுள்ளார்.
ஆனால், அது அவ்வளவு சுலபம் அல்ல. இருந்தாலும், செயற்கை மழைப் பொழிவுக்கான ஆய்வுகள் முழு வீச்சில் வெற்றி அடைந்து, அதற்கு அரசும் சம்மதம் தெரிவித்தா ல், மலைப் பகுதி களில் சகதியு டன் பெருக்கெடுத்த வெள்ளம் போல், நிச்சயம் ராஜஸ் தானிலும் வெள்ளம் பெருக்கெடுக்கும்.
அப்போது ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அனைத்தும் அடித்துச் செல்லும். எனவே, ஆக்கிரமிப்பாளர்கள் இப்போதே விழித்துக் கொள்வது நல்லது என்கிறார், அமைச்சர் கிரோடி லால் மீனா.d
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1