Paristamil Navigation Paristamil advert login

அமித் ஷா - செங்கோட்டையன் சந்திப்பு கூட்டணிக்கு வேட்டு வைக்குமா?

அமித் ஷா - செங்கோட்டையன் சந்திப்பு கூட்டணிக்கு வேட்டு வைக்குமா?

10 புரட்டாசி 2025 புதன் 16:22 | பார்வைகள் : 148


அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்திருப்பது, அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க.விலிருந்து வெளியே சென்றவர்களை இணைக்கும் பணியை 10 நாட்களுக்குள் துவங்க வேண்டும்' என, பழனிசாமிக்கு செங்கோட்டையன் கெடு விதித்தார். மறுநாளே செங்கோட்டையன் கட்சி பதவிகளை, பழனிசாமி பறித்தார்.

அ.தி.மு.க. நிர்வாகிகள் யாரும் செங்கோட்டையனுக்காக குரல் கொடுக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த செங்கோட்டையன், தியானம் செய்து மன அமைதி பெற ஹரித்வார் போவதாக சொல்லிவிட்டு, டில்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா ஆகியோரை சந்தித்தார்.

இது பற்றி அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை கூறும்போது, “இன்றுகூட அமித் ஷாவை சந்தித்தேன். செங்கோட்டையனை சந்தித்தது பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை. அதுபற்றி எங்களுக்கு கவலை இல்லை” என்றார்.

அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி மருது அழகுராஜ், ''தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., முதலில் தாமரை கொடியை ஏற்றினார். இப்போது, தாமரை கொடியை ஏற்கும் அளவுக்கு, அ.தி.மு.க. தலைவர்களை பா.ஜ. சிறைபிடித்துள்ளது,'' என கூறினார்.

”பழனிசாமியால் நீக்கப்பட்ட செங்கோட்டையனை, அமித் ஷா டில்லிக்கு வரவழைத்து சந்தித்திருப்பது, அ.தி.மு.க.வுக்கு விடப்பட்ட சவால். கூட்டணி கட்சியின் உள் விவகாரங்களில் பா.ஜ. நேரடியாக தலையிடுவதாகவே அர்த்தம். முன்பே இப்படி நடந்து கொண்டதால்தான், 2023ல் பா.ஜ. கூட்டணியை பழனிசாமி முறித்துக் கொண்டார். இப்போது, அதே நிலை திருபுகிறதோ என்ற சந்தேகம், அ.தி.மு.க.வினருக்கு ஏற்பட்டுள்ளது” என ஒரு சீனியர் தலைவர் கூறினார்.

அமித் ஷா- - செங்கோட்டையன் சந்திப்பால், அ.தி.மு.க.வில் பழனிசாமிக்கு எதிரான கலகக்குரல் அடங்குமா அல்லது பா.ஜ. கூட்டணிக்கு வேட்டு வைக்குமா என்று, இரு கட்சிக்குள்ளும் விவாதம் எழுந்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்