பரிஸ் : "அனைத்தையும் முடக்குவோம்!" - ஆர்ப்பாட்டத்துக்கு தயாரான 65 பேர் கைது!!
10 புரட்டாசி 2025 புதன் 08:22 | பார்வைகள் : 3495
இன்று செப்டம்பர் 10, புதன்கிழமை பல்வேறு தொழிங்கத்தினர் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளன. பல்வேறு நகரங்களில் இன்று பிற்பகலின் பின்னர் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற உள்ளன.
“அனைத்தையும் முடக்குவோம்!” எனும் தலைப்பில் இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தின் போது பலத்த வன்முறை பதிவாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தலைநகர் பரிஸ் மற்றும் அதன் புறநகரில் 65 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மற்றும் இன்று காலை காவல்துறையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பரிசில் இருந்து La Courneuve இணைக்கும் A1 நெடுஞ்சாலையினை முடக்கிய சிலரும் அதில் அடங்குவார்கள் என தெரிவிக்கப்படுகிறது. பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தை முடக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Porte de Bagnolet பகுதியில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

























Bons Plans
Annuaire
Scan