ஜாம்பவானின் சாதனையை முறியடித்த கைலியன் எம்பாப்பே
10 புரட்டாசி 2025 புதன் 14:47 | பார்வைகள் : 421
ஐஸ்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே ஜாம்பவான் வீரர் தியர்ரி ஹென்றியின் சாதனையை முறியடித்தார்.
உலகக்கிண்ண தகுதிச்சுற்று போட்டியில் பிரான்ஸ் மற்றும் ஐஸ்லாந்து அணிகள் பார்க் டெஸ் பிரின்ஸஸ் மைதானத்தில் மோதின.
இப்போட்டியின் 21வது நிமிடத்தில் ஐஸ்லாந்து வீரர் ஆன்ட்ரி குகோஜான்சென் கோல் அடித்தார்.
அதன் பின்னர் 45வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கைலியின் எம்பாப்பே (Kylian Mbappe) கோல் அடித்தார்.
அடுத்து பிராட்லீ பார்கோலா 62வைத்து நிமிடத்தில் கோல் அடிக்க, 68வது நிமிடத்தில் சக அணி வீரர் சிவப்பு அட்டை பெற்று வெளியேறினார்.
இறுதியில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.
எம்பாப்பே கோல் அடித்ததன் மூலம் பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்கள் அடித்த தியர்ரி ஹென்றியின் (Thierry Henry) 51 கோல்கள் சாதனையை முறியடித்தார்.
எனினும் இதில் 57 கோல்கள் அடித்து ஒலிவியர் கிரௌட் (Olivier Giroud) முதலிடத்தில் உள்ளார். அன்டோய்னி கிரீஸ்மன் (Antonie Griezmann) 44 கோல்களுடனும், மைக்கேல் பிளாட்டினி 41 கோல்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.


























Bons Plans
Annuaire
Scan