Paristamil Navigation Paristamil advert login

நேபாளத்தில் வெடித்துள்ள வன்முறை போராட்டம்....

நேபாளத்தில் வெடித்துள்ள வன்முறை போராட்டம்....

10 புரட்டாசி 2025 புதன் 14:47 | பார்வைகள் : 210


நேபாளத்தில் வெடித்துள்ள வன்முறை போராட்டம் காரணமாக இந்தியர்களுக்கு பயன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

நேபாளத்தில் Gen Z இளைஞர்களால் தொடங்கப்பட்ட போராட்டம் இரண்டாவது நாளாக தீவிரமடைந்துள்ளது.

 

பிரதமர் கே.பி. ஷர்மா ஒலியின் ராஜினாமாவைக் கோரி, ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் சமூக ஊடக தடையை எதிர்த்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் காத்மாண்டு, லலித்பூர் உள்ளிட்ட நகரங்களில் சாலைமறியல், டயர் எரிப்பு, அரசியல் தலைவர்களின் வீடுகளில் தாக்குதல் உள்ளிட்ட வன்முறைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

தகவல் தொடர்பு அமைச்சர் ப்ரித்வி சுமா குரூங்கின் தனியார் வீடு தீக்கிரையாக்கப்பட்டது.

 

பொலிஸார் தண்ணீர் பீரங்கிகள், அக்கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் துப்பாக்கிச்சுடு மூலம் கூட்டத்தை கலைக்க முயன்றனர்.

 

இதில், 18 பேர் உயிரிழந்தனர் மற்றும் 250-க்கும் மேற்பட்டோர் காயாமடைந்துள்ளனர்.

 

இந்த சூழ்நிலையை, 'தலைமுறை சிந்தனைகளில் குழப்பம்' என பிரதமர் ஒளி விவரித்துள்ளார். விசாரணை குழு அமைத்து 15 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாரு அவர் உத்தரவிட்டுள்ளார்.

 

இந்நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சு நேபாளத்திற்கு பயணிப்பதை தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

இந்திய-நேபாள எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. காத்மாண்டு விமான நிலையம் மூடப்பட்டதால் ஏராளமான இந்தியர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நாடு திரும்பி வருகின்றனர்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்