ரஷ்ய டிரோன்களை சுட்டு வீழ்த்திய போலந்து

10 புரட்டாசி 2025 புதன் 14:47 | பார்வைகள் : 273
ரஷ்ய டிரோன்களை போலந்து ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.
10-09-2025 புதன்கிழமை அதிகாலை போலந்து வான் பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த பல ரஷ்ய டிரோன்களை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.
2022ம் ஆண்டு உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து நேட்டோ உறுப்பு நாடொன்று ரஷ்ய இலக்குகளை தாக்குவது இதுவே முதல் முறையாகும்.
போலந்து மற்றும் நேட்டோ நாடுகளின் போர் விமானங்கள் இணைந்து ரஷ்ய இலக்குகளை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
மோதல் நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்ற போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க், தொடர்ச்சியான அத்துமீறல்களுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்துமீறிய டிரோன்கள் எண்ணிக்கை மற்றும் சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோன்களின் எண்ணிக்கை குறித்த தகவல் தெரியவில்லை. ஆனால் அத்துமீறிய டிரோன்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோதலை தொடர்ந்து 4 போலந்து விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1