அதர்வா திருமணம் எப்போது?
10 புரட்டாசி 2025 புதன் 17:08 | பார்வைகள் : 678
ரவீந்திர மாதவா இயக்கத்தில் அதர்வா நடித்த தணல் படம் இந்த வாரம் ரிலீஸ் ஆகிறது. சென்னையில் பல பேங்கை ஒரே நேரத்தில் கொள்ளை அடிக்கிற திட்டம் போடுகிற வில்லன் டீமின் சதியை அன்றைக்கு போலீஸ் கான்ஸ்டபிளாக சேர்ந்த அதர்வா எப்படி முறியடிக்கிறார் என்பது கதை. சிம்பு நடித்த அஅஅ படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பன் மகன் ஜான் பீட்டர் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
பொன்னியின் செல்வனில் சேந்தன் அமுதனாக நடித்த அஸ்வின் ககுமனு வில்லனாக நடித்து இருக்கிறார். லாவண்யா திரிபாதி ஹீரோயின். பெரும்பாலான காட்சிகள் இரவு நேரத்தில், அதுவும் ஒரு குடிசைப்பகுதி ஏரியாவில் நடப்பதாக கதை நகர்கிறது.
சென்னையில் நடந்த இந்த பட நிகழ்ச்சியில் பேசிய அதர்வா, ''ஒரு மாறுபட்ட கதையை எடுத்து இருக்கிறோம். நான் மீண்டும் போலீசாக நடித்து இருந்தாலும், இதில் வேறுமாதிரியான கேரக்டர். இது போன்ற படங்களுக்கு ஹீரோயின் தேவையா என்று கேட்கிறார்கள். ஹாலிவுட்டில் புதுப்புது ஜானரில் படங்கள் வருகிறது. ஓடிடியில் வித்தியாசமான கதைகள் வருகின்றன. பல படங்களில் ஹீரோயின் இருப்பது இல்லை. நாம் அந்த படங்களை பார்த்து ரசிக்கிறோம். ஆனால், நம் நாட்டில் காமெடி, ரொமான்ஸ், இசை இதெல்லாம் தேவைப்படுகிறது. ஒரு படத்தின் வெற்றிக்கு, பிஸினஸ்க்கு பல விஷயங்களை சேர்க்க வேண்டியது இருக்கிறது'' என்றார்.
‛‛நான் திருமணம் செய்யப்போகிறேன். பேச்சுலராக இருக்கும் தம்பி அதர்வாவுக்கும் திருமணம் நடக்க வேண்டும் என்று விஷால் கூறியிருக்கிறாரே'' என்று நிருபர்கள் கேட்க, 'விஷாலுக்கு திருமணம் நடந்தவுடன், என் திருமணம் நடக்கும்'' என பதில் அளித்தார் அதர்வா.


























Bons Plans
Annuaire
Scan