ஹீரோவாக அறிமுகமாகும் வித்யாசாகரின் மகன்.
10 புரட்டாசி 2025 புதன் 18:08 | பார்வைகள் : 808
பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் கோலிவுட்டில் ஹீரோவாக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சினிமா துறையில் பிரபலமாக இருப்பவர்களின் வாரிசுகள் நடிகராகவோ அல்லது நடிகையாகவே வருவது என்பது புதிய விஷயம் அல்ல.
அந்த வகையில் தந்தை வழியில் நடிகர்கள் விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி, ஜெயம் ரவி, சிம்பு, அருண்விஜய் என பல முன்னணி நடிகர்களே சினிமாவில் இப்படி வந்தவர்கள் தான்.
இந்நிலையில் அந்த வரிசையில் தமிழ் சினிமாவில் தற்போது இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷ வர்தன் ஹீரோவாக அறிமுகம் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹர்ஷ வர்தன் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்க உள்ளதாகவும், இந்த படம் பையா படம் போல இது ரொமான்டிக் ரோடு டிராவல் கதை தான் எனவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ஹர்ஷவர்தன் சில வருடங்கள் முன்பு இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் தற்போது ஹீரோவாகவும் களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


























Bons Plans
Annuaire
Scan