பிரான்சில் சிக்குங்குனியா பரவல் அதிகரிப்பு!!
10 புரட்டாசி 2025 புதன் 19:28 | பார்வைகள் : 3838
2025ம் ஆண்டு மே மாதத்திலிருந்து பிரான்சில் சிக்குங்குனியா நோய்க்கு 382 வழக்குகள் பதிவாகியுள்ளன.
இது புல்வெளிக் கொசுக்களின் கடியால் பரவும் ஒரு வைரஸ் நோயாகும். குறிப்பாக பரிஸிலும் முதல் முறையாக சிக்கங்குனியா வழக்கு கண்டறியப்பட்டுள்ளது. சில பகுதிகளில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பரவல், லா ரீயூனியன் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட தொற்றின் விளைவாகவும், அதன் மூலமாக பிரான்சில் வந்த நோய்த்தொற்றாளர்களால் ஏற்பட்டதாக கருதப்படுகிறது.
மேலும், புல்வெளிக் கொசுக்களால் பரவும் டெங்கு நோய் 21 வழக்குகளுடன் 11 இடங்களில் பரவியுள்ளது. நைல் காய்ச்சலும் 23 வழக்குகள் உடன் புதிய இடங்களிலும் பரவியுள்ளதைக் காணலாம். இதற்கெல்லாம் முக்கிய காரணமாக, வெப்பமடைந்த காலநிலை மற்றும் புல்வெளிக் கொசுக்கள் தற்போது பிரான்சின் 81 மாவட்டங்களில் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது, மக்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அளவில் புதிய சவாலாக உருவெடுத்துள்ளது.


























Bons Plans
Annuaire
Scan