Paristamil Navigation Paristamil advert login

ஸ்மார்ட் கேமராக்கள்: Montrouge நகரத்திற்கு ஆதரவாக நீதிமன்றத்தின் தீர்ப்பு!!

ஸ்மார்ட் கேமராக்கள்: Montrouge நகரத்திற்கு ஆதரவாக நீதிமன்றத்தின் தீர்ப்பு!!

10 புரட்டாசி 2025 புதன் 20:28 | பார்வைகள் : 632


Montrouge நகர வழிமுறை கண்காணிப்பு மென்பொருளின் பயன்பாட்டை நிறுத்தி வைத்தல் தொடர்பாக எதிர்க்கட்சியால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதி Annabelle Huet (LFI) வின் மனுவை நிர்வாக நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, குறிப்பிடப்பட்ட மென்பொருள் ஏற்கனவே கடந்த பிப்ரவரி 28ஆம் திகதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அதனை உடனடியாகத் தடைசெய்ய வேண்டும் என்ற மனுவிற்கு அவசியமில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நகர மேயர் Étienne Lengereau, மென்பொருள் மூலம் சேகரிக்கப்பட்ட அனைத்து தரவுகளும் அழிக்கப்பட்டு விட்டதாகவும், எந்தவித பதிவுகளும் சேமிக்கப்படவில்லை என நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார். ஆனால், Annabelle Huet இதை அரசியல் வெற்றி எனக் குறிப்பதோடு, மென்பொருள் பயன்பாடு சட்டபூர்வமானதா அல்லது சட்டவிரோதமானதா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தனது வழக்கைத் தொடர்ந்து கொண்டு செல்கிறார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்