Paristamil Navigation Paristamil advert login

540 பேர் கைது! - 197,000 பேர் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம்!!

540 பேர் கைது! - 197,000 பேர் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம்!!

11 புரட்டாசி 2025 வியாழன் 06:00 | பார்வைகள் : 1149


அனைத்தையும் முடக்குவோம் ("Bloquons tout!") எனும் கோஷத்தோடு வேலை நிறுத்தத்தில் குதித்த தொழிற்சங்கத்தினர், நாட்டின் பல இடங்களில் 200 வரையான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

197,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். தலைநகர் பரிஸ் உட்பட கிட்டத்தட்ட அனைத்து நகரங்களிலும் வன்முறையுடன் கூடிய ஆர்ப்பாட்டங்கள் பதிவாகின. குப்பைத்தொட்டிகளை தீ வைத்தும், டயர்களை வீதியில் போட்டு கொளுத்தியும், பொதுச் சொத்துக்களை நாசமாக்கியும் ஆர்ப்பாட்டங்கள் முடிவுக்கு வந்திருந்தன.

நாள் முடிவில் மொத்தமாக 540 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் 211 பேர் தலைநகர் பரிசில் கைதாகியுள்ளனர். 415 பேர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளனர்.


வன்முறையில் காவல்துறையினர் ஜொந்தாமினர் என மொத்தமாக 23 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.  880 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்