Paristamil Navigation Paristamil advert login

ஏ.ஐ. உதவியுடன் இலக்கை தானாக கண்டறியும் தொழில்நுட்பம்: இந்திய ராணுவ அதிகாரி சாதனை

ஏ.ஐ. உதவியுடன் இலக்கை தானாக கண்டறியும் தொழில்நுட்பம்: இந்திய ராணுவ அதிகாரி சாதனை

11 புரட்டாசி 2025 வியாழன் 08:46 | பார்வைகள் : 172


ராணுவ அதிகாரி உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு உதவியுடன் ரேடாரில் இலக்குகளை தானாக கண்டறியும் அமைப்புக்கு இந்திய ராணுவம் காப்புரிமை பெற்றுள்ளது.

ஏஐ தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி, பல்வேறு துறைகளிலும் எதிரொலித்து வருகிறது. வேலைவாய்ப்புகளை ஏஐ தொழில்நுட்பம் பறித்துக் கொள்ளும் என்ற கவலை ஒரு புறம் இருந்தாலும் அதனை பயன்படுத்தி பல முக்கியமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது ராணுவமும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த துவங்கி உள்ளது. இந்திய ராணுவத்தின் கர்னல் குல்தீப் யாதவ் என்பவர், ஏஐ உதவியுடன் ரேடார் மூலம் இலக்குகளை தானாக கண்டறியும் அமைப்பு ஒன்றை உருவாக்கி உள்ளார். இதற்கு ராணுவம் காப்புரிமை பெற்றுள்ளது. இந்த புதுமையான கண்டுபிடிப்பானது, மனிதர்களின் தலையீடு இல்லாமல் ரேடார் மூலம் இலக்குகளை தானாக கண்டறிந்து வகைப்படுத்தி விடும். இதன் மூலம் ராணுவத்தின் பணி மேலும் வேகம் பெறும்.

தொழில்நுட்பத்துறையில் சுயசார்பை வலுப்படுத்துவதற்கும், பாதுகாப்பு துறையின் தன்னிறைவு இந்தியா என்ற உறுதிப்பாட்டுக்கும் கர்னல் குல்தீப் யாதவின் புதுமையான கண்டுபிடிப்பு வலுச்சேர்க்கிறது என ராணுவம் பெருமிதம் தெரிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்