Paristamil Navigation Paristamil advert login

ரூ.2,532 கோடி வருமானம் ஈட்டிய மாநில கட்சிகள் !

ரூ.2,532 கோடி வருமானம் ஈட்டிய மாநில கட்சிகள் !

11 புரட்டாசி 2025 வியாழன் 10:46 | பார்வைகள் : 151


நாடு முழுவதும் உள்ள 40 மாநில கட்சிகள் 2023 -24ம் நிதியாண்டில் ரூ.2,532.09 கோடி வருமானம் ஈட்டி உள்ளன. இவற்றில் 70 சதவீதம் தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்துள்ளதாக, ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 2023 - 24ம் நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள மாநில கட்சிகளின் வருமானம் குறித்து ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதன்படி,

அதில், இந்த நிதியாண்டில் 40 மாநில கட்சிகள் சேர்ந்து ரூ.2,532.096 கோடி வருமானம் ஈட்டி உள்ளன. அதில் 70 சதவீதம்( ரூ.1,796.024) கோடி தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்துள்ளன.

அதிக வருமானம் ஈட்டிய கட்சிகள்


பிஆர்எஸ்( பாரதிய ராஷ்ட்ரிய சமிதி) - ரூ.685.51 கோடியும்( முந்தைய ஆண்டை விட ரூ.52 கோடி குறைவு)

திரிணமுல் காங்கிரஸ்- ரூ.646.39 கோடியும்( முந்தைய ஆண்டை விட ரூ.312 கோடி அதிகம்)

பிஜூ ஜனதா தளம் - ரூ.297.81 கோடியும்( முந்தைய ஆண்டை விட ரூ.116 கோடி அதிகம்)

தெலுங்கு தேசம் - ரூ.285.07 கோடியும்( முந்தைய ஆண்டை விட ரூ.221 கோடி அதிகம்)

ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் - ரூ.191.04 (முந்தைய ஆண்டை விட ரூ.116 கோடி அதிகம்)

திமுக - ரூ.180.94 கோடி( முந்தைய ஆண்டை விட ரூ.33 கோடி குறைவு)

அதிமுக - ரூ.46.98 கோடி வருமானம் ஈட்டி உள்ளன. ( முந்தைய ஆண்டை விட ரூ.26 கோடி அதிகம்)

இவ்வாறு வருமானம் பெற்ற 27 மாநில கட்சிகள், தங்களின் வருமானத்தை செலவு செய்யவில்லை. 12 கட்சிகள் வருமானத்தை விட செலவு அதிகரித்துள்ளது.

தங்களுக்கு கிடைத்த வருமானத்தில்

பிஆர்எஸ் - ரூ.430.60 கோடி

திரிணமுல் - ரூ.414.92

பிஜூ ஜனதா தளம் - ரூ.253.79 கோடியை செலவு செய்யாமல் வைத்துள்ளன.

இதற்கு மாறாக ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம்,ஓய்எஸ்ஆர் காங் ஆகிய கட்சிகள் வருமானத்தை விட அதிக செலவு செய்துள்ளன.

பிஆர்எஸ், திரிணமுல் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட 10 கட்சிகள் தேர்தல் பத்திரம் மூலம் ரூ.1,796.02 கோடி ( 70.93 சதவீதம்) வருமானம் ஈட்டியுள்ளன.

மாநில கட்சிகள், கடந்த 2022 -23 நிதியாண்டில் இந்த கட்சிகள் சேர்ந்து ரூ.1,736.85 கோடி மொத்த வருவாய் பெற்றன. அடுத்தாண்டு வருமானம் 45.77 சதவீதம் அதிகரித்துள்ளது மேற்கண்ட விவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்