இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 3 இலட்சம் ரூபாவை எட்டிய தங்கம்
11 புரட்டாசி 2025 வியாழன் 10:02 | பார்வைகள் : 602
இலங்கையில் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக தங்கத்தின் விலை இவ்வாறு அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, இந்த தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 3 இலட்சம் ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
அத்துடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 2 இலட்சத்து 77 ஆயிரத்து 500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.


























Bons Plans
Annuaire
Scan