உக்ரைனின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பிரித்தானிய புதிய அதிநவீன டிரோன்கள்

11 புரட்டாசி 2025 வியாழன் 11:02 | பார்வைகள் : 272
உக்ரைனின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பிரித்தானிய புதிய அதிநவீன டிரோன்களை அதிக அளவு தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் வான்வழி தாக்குதல் சமீபத்தில் அதிகரித்துள்ள நிலையில், உக்ரைனை பாதுகாக்கும் வகையில் பிரித்தானியா உக்ரைனுடன் இணைந்து புதிய அதிநவீன தாக்குதல் இடமறிப்பு டிரோன்களை அதிக அளவு தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
போலந்து எல்லைக்குள் ரஷ்ய டிரோன்கள் அத்துமீறி நுழைந்ததை அடுத்து நேட்டோ படைகளால் அவை சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில் நேட்டோ உறுப்பு நாட்டின் முதல் தாக்குதல் தலையீடாக இது பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, உருவாக்கப்படும் புதிய டிரோன்கள் உக்ரைன் மீது நடத்தப்படும் ஆளில்லா விமான தாக்குதலை தடுக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இவை பிரித்தானிய மற்றும் உக்ரைனிய விஞ்ஞானிகளின் கூட்ட முயற்சி என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி, உக்ரைனுடன் இணைந்த புதிய டிரோன் திட்டம் குறித்த தகவலை இன்று லண்டனில் நடைபெறும் வர்த்தக கண்காட்சியில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் - பிரித்தானியா இடையிலான இந்த கூட்டு தயாரிப்பு முயற்சியை பிரித்தானிய பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் “வரலாற்று சிறப்புமிக்க தருணம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உக்ரைனுக்கான பிரித்தானியாவின் ஆதரவையும் ஸ்டார்மர் உறுதிப்படுத்தியுள்ளார்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025