Paristamil Navigation Paristamil advert login

உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார் மஹிந்த

உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார் மஹிந்த

11 புரட்டாசி 2025 வியாழன் 13:02 | பார்வைகள் : 193


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பிலுள்ள விஜேராம வீதியில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சற்று முன் வெளியேறினார்.

கொழும்பு, விஜேராம வீதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அரசியல்வாதிகள்,வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் ஆதரவாளர்கள் என பல்லேறு தரப்பினர் வியாழக்கிழமை  காலை முதல் வருகை தந்திருந்தனர்.

இன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறவுள்ளதாக வெளியான தகவலையடுத்து அனைவரும் அங்கு சென்றனர்.

சீனத்தூதுவர் உள்ளிட்ட பல இராஜதந்திரிகள், அரசியல்வாதிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை தந்தனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்