ஓகஸ்ட்டில் - வெப்பத்தினால் 280 பேர் பலி!
11 புரட்டாசி 2025 வியாழன் 16:27 | பார்வைகள் : 1365
சென்ற ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் வெப்பம் காரணமாக 280 பேர் பலியானதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
பிரெஞ்சு சுகாதாரப் பணிமனை (Santé publique France) இந்த அறிக்கையை நேற்று வெளியிட்டது. முந்தைய வருடங்களை விடவும் இந்த வருட கோடை மிகுந்த வெப்பம் நிலவிய வருடமாக இருந்தது. 43°C வெப்பம் பல நாட்கள் நிலவியிருந்தது. ஜூலை ஜூலை மாதத்தில் பதிவான மரணங்களின் எண்ணிக்கை ஏற்கனவே அதிகரித்திருந்த நிலையில், ஓகஸ்ட் மாதத்தில் 280 மரணங்கள் மேலதிகமாக பதிவாகியிருந்தன.
ஒவ்வொரு வருட ஓகஸ்ட்டிலும் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கையை விடவும் 5% சதவீதம் அதிகமாகும்.


























Bons Plans
Annuaire
Scan