ஓசூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.24,307 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

12 புரட்டாசி 2025 வெள்ளி 11:46 | பார்வைகள் : 127
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ. 24 ஆயிரத்து 307 கோடி முதலீடு செய்வதற்கு 92 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. சுமார் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் ஓசூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், ரூ. 23,303.15 கோடி முதலீட்டில், 44,870 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 53 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் ரூ. 1003.85 கோடி முதலீட்டில் 4,483 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில், 39 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது; கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் ஒரு லட்சம் சிறு,குறு,நடுத்தர நிறுவனங்கள் இயங்கி வருகிறது. ஓசூர் தொழில் வளர்ச்சிக்காக நாம் செய்தது சிப்காட் தொழில் பூங்கா. இதில், 371 தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. 2 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சிப்காட்டில் தடையில்லா மீன் வழங்க நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தொழில்துறை மாற்றத்தை விரைவுபடுத்தும் நோக்கில், போர்ட் இன்குபேட்டர் அமைக்கப்பட்டிருக்கிறது. சூலகிரி பகுதியில் 689 ஏக்கர் பரப்பளவில் ஒரு தொழிற்பூங்கா. பர்கூரில் சிறப்பு பொருளாதாரத்துடன் கூடிய தொழிற்பூங்கா, குருபரபள்ளியில் 150 ஏக்கரில் தொழிற்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
ரூ.210 கோடி மதிப்பில் இன்று திறந்து வைக்கப்பட்ட ப்யூச்சர் மொபிலிட்டி பார்க்கில் 22 நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.2,728 கோடி உறுதியளிக்கப்பட்ட முதலீடு பெறப்பட்டுள்ளது. 6,682 உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது.
தேன்கனிக்கோட்டையில் பணியாளர்கள் தங்க 64 ஏக்கரில் தொழிலாளர் குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. ஜிசிசி எனப்படும் ஐடி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், உயர்தர ஆராய்ச்சி மையங்களின் மையமாக ஓசூரை உருவாக்க திட்டம். அறிவுசார் வழித்தடத் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.
ஓசூரில் ரூ.400 கோடி மதிப்பில் டைட்டில் பார்க் நிறுவப்பட இருக்கிறது. ஓசூர் விமான நிலையத்தை உருவாக்க முக்கியத்துவம். இந்த விமான நிலையம் ஓசூரை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்லும். பிற மாநிலங்களுக்கு சவால் விடும் நகரமாக ஓசூர் வளர்ந்துள்ளது, என்றார்.v
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025