ஜமால் கஷோக்ஜியின் பெயரை குறிப்பிட்டு தற்கொலை செய்த பரபரப்பு சம்பவம்!!!
.jpeg)
11 புரட்டாசி 2025 வியாழன் 20:01 | பார்வைகள் : 591
பரிஸில் உள்ள உள்துறை அமைச்சகம் அமைந்துள்ள Beauvau மைதானத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து இன்று பிற்பகல் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
பாய்வதற்கு முன் அவர் ஒரு பதாகையை தொங்கவிட்டு, “ஜமால் கஷோக்ஜி போல கடத்தப்பட்டு இறப்பதற்கு பதிலாக அமைதியாகப் போவது நன்று” என்ற உரையுடன் துண்டுப்பிரசுரங்களை வீசியுள்ளார். மீட்புப் பணியாளர்கள் வந்தபோதும் அவரை உயிர்ப்பிக்க முடியவில்லை.
ஜமால் கஷோக்ஜி என்பவர் 2018ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள சவூதி தூதரகத்தில் கொல்லப்பட்ட சவூதி பத்திரிகையாளர் ஆவார்.
தற்கொலை செய்தவரின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை. சம்பவம் நடந்த இடம் உள்துறை அமைச்சகம் இருக்கும் இடமாக இருப்பதனால், மிகுந்த பாதுகாப்புடன் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்தது. போலீசாரும் தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்தில் பதற்றமான சூழலில் பணியாற்றினர். மாலை நேரத்தில், Beauvau மைதானம் வாகனப் போக்குவரத்துக்கு மூடப்பட்டது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025