Paristamil Navigation Paristamil advert login

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 வருட சிறைத்தண்டனை

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 வருட சிறைத்தண்டனை

12 புரட்டாசி 2025 வெள்ளி 11:17 | பார்வைகள் : 176


பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு இராணுவ புரட்சியை ஏற்படுத்த சதி செய்தமைக்காக, அந்த நாட்டின் நீதிமன்றினால் 27 ஆண்டுகளும் 3 மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ, 2022 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவிடம் தோல்வியடைந்தார்.

 

அதன்போது, தமது ஆட்சியை தக்கவைத்து கொள்ள இராணுவ புரட்சியை ஏற்படுத்துவதற்கான சதித்திட்டத்தை வழிநடத்தியதாக அவர் குற்றம் சாட்டப்பட்டார்.

 

விசாரணையில் அந்த நாட்டு உயர்நீதிமன்றில் நான்கு நீதியரசர்கள் அவரை குற்றவாளி என்று கண்டறிந்தனர், ஒருவர் அவரை விடுவிப்பதற்கு தீர்மானித்திருந்ததாக சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவித்தன.

 

தற்போது வீட்டுக் காவலில் உள்ள ஜெயர் போல்சனாரோ தீர்ப்பின்போது நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

 

இதனிடையே, இந்த தீர்ப்பு நியாயமற்றது என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ குறிப்பிட்டுள்ளார்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்