Paristamil Navigation Paristamil advert login

ஹொட்டலில் இருந்து வெளியேற்றப்பட்ட விராட் கோலி - நியூசிலாந்தில் நடந்தது என்ன?

ஹொட்டலில் இருந்து வெளியேற்றப்பட்ட விராட் கோலி - நியூசிலாந்தில் நடந்தது என்ன?

12 புரட்டாசி 2025 வெள்ளி 14:50 | பார்வைகள் : 113


விராட் கோலியை ஹொட்டலில் இருந்து வெளியேற சொன்னது குறித்து ஜெமீமா ரோட்ரிகஸ் பேசியுள்ளார்.

 

கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், 2017 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர்.

 

இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டில் இறுதியில் குடும்பத்துடன் லண்டனுக்கு குடிபெயர்ந்தனர்.

 

 

இந்தியாவில் கோலி மற்றும் அனுஷ்கா எங்கு சென்றாலும், ரசிகர்கள் மற்றும் கமெராக்களால் சூழப்படுவதால், தங்கள் குழந்தைகளை அமைதியான சூழலில் வளர்க்க லண்டனுக்கு குடிபெயர்ந்ததாக கூறப்படுகிறது.

 

கிரிக்கெட் போட்டிகள் போன்ற முக்கியமான காரணங்களுக்காக மட்டும் இந்தியா வருகின்றனர்.

 

இந்நிலையில், விராட் கோலி நியூசிலாந்தில் ஹொட்டல் ஒன்றில் இருந்து வெளியேற்றப்பட்டது குறித்து இந்திய அணியின் கிரிக்கெட் வீராங்கனை ஜெமீமா ரோட்ரிகஸ் பேசியுள்ளார்.

 

ஜெமீமா ரோட்ரிகஸ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "நானும் ஸ்ம்ரிதி மந்தனாவும் நியூசிலாந்தில் விராட் கோலியை சந்தித்த போது, அவரிடம் துடுப்பாட்டம் தொடர்பாக ஆலோசனை பெற விரும்பினோம்.

 

அவர் சம்மதம் தெரிவித்த பின்னர், ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணியினர் தங்கியுள்ள ஹொட்டலுக்கு அவரை அழைத்து சென்றோம். அனுஷ்கா சர்மாவும் அவருடன் வந்திருந்தார்.

 

முதல் 30 நிமிடங்களுக்கு கிரிக்கெட் குறித்து விவாதித்தோம். உங்களிடமும், ஸ்ம்ரித்தியிடமும் பெண்கள் கிரிக்கெட்டில் மாற்றம் கொண்டு வரும் திறமை உள்ளதை பார்க்கிறேன் என கோலி தெரிவித்தார்.

 

 

அதன் பின்னர் வாழ்க்கை குறித்து பேசினோம். நீண்ட நாட்கள் கழித்து சந்தித்த நண்பர்களிடம் பேசியது போல் இருந்தது.

 

நாங்கள் பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை. 4 மணி நேரத்திற்கு மேலாக பேசிக்கொண்டிருந்தோம். ஹொட்டல் ஊழியர் வந்து எங்களை ஹோட்டலை விட்டு வெளியேறுமாறு கூறினார். அதன் பிறகே பேச்சை நிறுத்தினோம்" என தெரிவித்துள்ளார்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்