Paristamil Navigation Paristamil advert login

ரஷ்யாவிற்கு எதிராக புதிய பொருளாதார தடைகளை அறிவித்த ஐரோப்பிய நாடு

ரஷ்யாவிற்கு எதிராக புதிய பொருளாதார தடைகளை அறிவித்த ஐரோப்பிய நாடு

12 புரட்டாசி 2025 வெள்ளி 15:50 | பார்வைகள் : 178


பிரித்தானிய அரசு, ரஷ்யாவிற்கு எதிராக 100 புதிய பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது.

ரஷ்யாவின் வருமானம் மற்றும் போர் உபகரணங்கள் தொடர்பான ஆதாரங்களைக் குறைக்கும் நோக்கத்துடன் பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் யெவெட் கூப்பர் தலைமையில் இந்த தடைகள் அறிவிக்கப்பட்டது.

இந்த தடைகள், ரஷ்யாவின் Shadow Fleet எனப்படும் எண்ணெய் கடத்தும் கப்பல்களிலும், ஏவுகணை மற்றும் வெடிபொருள் உபகரணங்களை வழங்கும் மின்னணுவியல் மற்றும் இரசாயன நிறுவனங்களிலும் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, 70 கப்பல்கள் மற்றும் 30 நிறுவனங்கள்/ தனிநபர்கள் இந்த புதிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சீனாவைச் சேர்ந்த Shenzhen Blue Hat International Trade Co. நிறுவனம், அதன் உரிமையாளர் Elena Malitckaia மற்றும் Alexey Malitskiy மற்றும் துருக்கியில் உள்ள Mastel Makina நிறுவனத்தின் CEO Shanlik Shukurov ஆகியோர் இந்த தடைகளின் கீழ் உள்ளனர்.

ரஷ்ய ஜனாதிபதி புடினின் போர் நடவடிக்கைகளை எதிர்த்து,பிரித்தானியா தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்