Paristamil Navigation Paristamil advert login

கத்தார் பிரதமருடன் டொனால்ட் டிரம்ப் சந்திப்பு

கத்தார் பிரதமருடன் டொனால்ட் டிரம்ப் சந்திப்பு

12 புரட்டாசி 2025 வெள்ளி 15:50 | பார்வைகள் : 185


மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் கத்தார் பிரதமரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் வெள்ளிக்கிழமை நியூயார்க் நகரில் வைத்து கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல்-தானியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இந்த சந்திப்பில், மோதல்களை தணிப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு முயற்சிகள் மற்றும் பிராந்தியத்தின் முக்கிய நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் இஸ்ரேலுடனான பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் நடைபெறுவதாக ஆக்சியோஸ் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இந்த சந்திப்பானது ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பிறகு நடைபெற உள்ளது.

தாக்குதலுக்கு பிறகு, இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான கத்தாரின் மத்தியஸ்த முயற்சிகளை இந்த சம்பவம் பாதிக்காது என நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்