போலந்தில் ரஷ்ய ட்ரோன் புகுந்த சம்பவம்: பிரான்சின் கடுமையான பதில்!!

12 புரட்டாசி 2025 வெள்ளி 19:41 | பார்வைகள் : 538
புதன்கிழமை 19 ரஷ்ய ட்ரோன்கள் போலந்து நாட்டுக்குள் நுழைந்த சம்பவத்திற்கு பதிலளிக்க, பிரான்ஸ் ரஷ்ய தூதரை அழைத்துச் சம்பவ விளக்கங்கள் கேட்டது மற்றும் மூன்று ரபேல் போர் விமானங்களை போலந்தில் குவித்தது போன்றவை NATO ஒப்பந்தத்தின் கீழ் போலந்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சியாகும்.
ஜெர்மனி, இங்கிலாந்து, சுவீடன் உள்ளிட்ட நாடுகளும் கிழக்கு NATO எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. இது ரஷ்யாவுக்கு ஒரு ராணுவ எச்சரிக்கையாகும்.
இதே நேரத்தில், ரஷ்யாவின் குறைந்த செலவில் தயாரிக்கப்படும் ட்ரோன்களுக்கு எதிராக மற்றும் சுலபமான பாதுகாப்பு முறைகள் தேவைப்படுகிறது. உக்ரைனியர்கள் இத்துறையில் முன்னேறி பல்வேறு டெக்னிக்களை உருவாக்கியுள்ளனர். பல மேற்கு நாடுகள், உக்ரைனின் அனுபவங்களைப் பயன்படுத்தி தங்களது ட்ரோன் எதிர்ப்பு பாதுகாப்புகளை மேம்படுத்தி வருகின்றன. பிரான்சும் Proteus எனும் புதிய ட்ரோன் எதிர்ப்பு ஆயுதத்தை உருவாக்கியுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025