Paristamil Navigation Paristamil advert login

பிரதமர் - ஜனாதிபதியுடன் மதிய போசனம்!!

பிரதமர் - ஜனாதிபதியுடன் மதிய போசனம்!!

12 புரட்டாசி 2025 வெள்ளி 20:03 | பார்வைகள் : 468


 

புதிய பிரதமர் Sébastien Lecornu, இன்று ஜனாதிபதி மக்ரோனுடன் மதிய போசன விருந்தில் கலந்துகொண்டார்.

இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் எலிசே மாளிகையில் இந்த உணவு உபசாரம் இடம்பெற்றது. ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், அவருடன் முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோனும் அவருடன் பிரதமர் Sébastien Lecornu உம் உடன் இருந்தனர்.

அதற்கு முன்னதாக பிரதமர் அலுவலகத்தில் (Matignon)  அமைச்சரவை சந்திப்பு இடம்பெற்றது. இதில் சில அமைசர்கள் கலந்துகொண்டிருந்தனர். புதிய அமைச்சர்கள் சிலர் மாற்றப்பட உள்ள நிலையில், அவர்களுக்கான தேர்வும் இடம்பெற்றதாக அறிய முடிகிறது.

இந்நிலையில், பிரதமர் Lecornu தனது முதலாவது உத்தியோகபூர்வ பயணத்தை Saône-et-Loire நகருக்கு மேற்கொள்கிறார். அங்கு மாவட்ட சுகாதார பணிமனை அதிகாரிகளை சந்திக்க உள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்