தைவான் கடலில் அமெரிக்கா-பிரித்தானியாவின் போர் கப்பல்கள்-சீனா கடும் எச்சரிக்கை

13 புரட்டாசி 2025 சனி 16:33 | பார்வைகள் : 187
தைவான் கடல் பிராந்தியத்திற்குள் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய போர் கப்பல்கள் நுழைந்ததற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தைவானை சீனாவில் இருந்து பிரிக்கும் 110 மைல் தூரம் கொண்ட கடல் பரப்பு வழியாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவை சேர்ந்த USS Higgins மற்றும் HMS Richmond ஆகிய இரண்டு போர் கப்பல்களும் கடந்து சென்றுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க மற்றும் பிரித்தானிய போர் கப்பல்களின் செயல்களுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் இரு நாடுகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்ததுடன், இதனை பிராந்தியத்தில் பிரச்சினை தூண்டும் மற்றும் ஆத்திரமூட்டும் செயல் என்றும் சீனா எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் கிழக்கு தியேட்டர் கமாண்ட், அத்துமீறிய இரண்டு கப்பல்களையும் தங்கள் போர் கப்பல்கள் மற்றும் விமானங்கள் விடாமல் கண்காணித்து எச்சரிக்கை தெரிவித்ததாக உறுதிப்படுத்தியுள்ளது.
சீனா ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் இந்த செயல் தவறான தகவல்களை அனுப்புவதாகவும், இவை பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்துவதாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளது.
தைவான் இறையாண்மை தொடர்பான சீனாவின் இராஜதந்திர மோதலையும், சர்வதேச நாடுகளின் தலையீடுகளையும் எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025