முள்ளங்கியில் இத்தனை பயன்களா...?
23 தை 2021 சனி 06:52 | பார்வைகள் : 11902
தினந்தோறும் முள்ளங்கியை கூட்டு, பொரியல் போன்ற பதார்த்தங்களாக செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமான கோளாறுகள் நீங்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும்.
முள்ளங்கிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், கால்சியம், பொட்டாசியம் மற்றும் பல தாதுக்கள் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் இருதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகின்றன.
முள்ளங்கி இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் இயற்கை நைட்ரேட்டுகளின் நல்ல மூலமாகும். முள்ளங்கி இயற்கையாகவே அதிக நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை எளிதாக்குவதாகும். அத்துடன் உடலிலும் இருக்கும் கழிவுகளை குடல் வழியாக வெளியேற்ற உதவுகிறது.
முள்ளங்கியில் ஏராளமான குளுக்கோசினோலேட்டுகள் மற்றும் சல்பர் கலவைகள் உள்ளன. புற்றுநோயை ஏற்படுத்தும் மரபணு மாற்றங்களிலிருந்து உயிரணுக்களைப் பாதுகாக்கும் திறன் இதற்கு உண்டு.
புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியைத் தூண்டும் உயிரணுக்களின் வளர்ச்சியைத் தடுப்பதே இதன் முக்கியபங்கு. உடலில் இருந்து புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளை அகற்ற உதவுகிறது.
எப்படிப்பட்ட மூல நோயையும் தினந்தோறும் முள்ளங்கி காயை சமைத்து உண்டு வருவதால் மூல நோய்களில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.


























Bons Plans
Annuaire
Scan