Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல் - அமெரிக்க உறவு நீடிக்கும்...! ரூபியோ வெளிப்படை

இஸ்ரேல் - அமெரிக்க உறவு நீடிக்கும்...! ரூபியோ வெளிப்படை

14 புரட்டாசி 2025 ஞாயிறு 06:41 | பார்வைகள் : 187


கத்தார் மீதான தாக்குதல் இஸ்ரேலுடனான அமெரிக்காவின் நெருக்கமான உறவை மாற்றாது என்று வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அமெரிக்கா உடன்படவில்லை என்றும் ரூபியோ குறிப்பிட்டுள்ளார். 

இஸ்ரேலின் நடவடிக்கையில் நாங்கள் உடன்படவில்லை, ஜனாதிபதி ட்ரம்பும் இந்த விவகாரத்தில் மகிழ்ச்சியாக இல்லை என்றே, இஸ்ரேல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த புறப்படும் முன்னர் ரூபியோ பத்திரிகையாளர்களிடம் குறிப்பிட்டார்.

கத்தார் தாக்குதல் காரணமாக இஸ்ரேல் - அமெரிக்க உறவின் தன்மை மாறப் போவதில்லை. ஆனால், இந்த விவகாரம் தொடர்பில் இஸ்ரேல் அதிகாரிகளுடன் அமெரிக்கா விவாதிக்கும் என ரூபியோ தெரிவித்துள்ளார்.

கத்தார் மீதான தாக்குதலால் ஏற்படவிருக்கும் பின்விளைவுகள் குறித்தும் விவாதிக்கப்படும் என்றார். அத்துடன், இஸ்ரேலின் இந்த நகர்வால் காஸா போரில் எவ்வகையான தாக்கம் ஏற்படும் என்பதையும் விவாதத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.

ஏற்கனவே, கத்தார் மீதான தாக்குதல் ட்ரம்ப் நிர்வாகத்தின் இரட்டை முகத்தை அம்பலப்படுத்தியுள்ளதாக கூறப்படும்.

இஸ்லாமிய மற்றும் அரபு நாடுகள் இந்த விவகாரத்தில் வரம்பற்ற ஆதரவை அறிவித்துள்ளதும்,

கத்தார் மீதான தாக்குதலை அடுத்து இஸ்ரேல் பிரதமரின் மிரட்டல் விடுக்கும் பேச்சும், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை புதிய முடிவெடுக்க கட்டாயப்படுத்தியுள்ளதாகவே கூறப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்