தமிழகம், தெலுங்கானா மதுபான ஆலைகளில் இருந்து பணம்; பிரசாந்த் கிஷோர் மீது பகீர் புகார்

14 புரட்டாசி 2025 ஞாயிறு 10:40 | பார்வைகள் : 141
தமிழகம், தெலுங்கானாவில் உள்ள மதுபான ஆலையில் இருந்து பிரசாந்த் கிஷோருக்கு பணம் வருகிறது'' என பாஜ எம்பி சஞ்சய் ஜெய்ஸ்வால் குற்றம் சாட்டினார்.
இது குறித்து பீஹார் பாஜ எம்பி சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறியதாவது: ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் பாஜவின் ஓட்டுக்களை குறைக்க, ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் உடன் இணைந்து சதி வேலை செய்கிறார். தமிழகம், தெலுங்கானாவில் உள்ள மதுபான ஆலையில் இருந்து பிரசாந்த் கிஷோருக்கு பணம் வருகிறது.
முதல்நாளில் இருந்தே பிரசாந்த் கிஷோர் மக்களை ஏமாற்றி வருகிறார். தனது கட்சி உருவான பின்னணி குறித்து அவர் பொய் சொல்கிறார். அவர் ஆகஸ்ட் 2022ம் ஆண்டு டில்லியில் ஜன் சுராஜ் கட்சியை உருவாக்கினார். ஆனால் அக்டோபர் மாதம் 2024ம் ஆண்டு பீஹாரில் கட்சி தொடங்கப்பட்டதாக பொய் சொல்கிறார்.
பொய்கள், ஏமாற்றுதல் மற்றும் மோசடி மூலம் தனது கட்சியைத் தொடங்கிய அவர் எவ்வளவு பெரிய மோசடி செய்பவர் என்று சிந்திக்க வேண்டும். ஜன் சுராஜ் கட்சியின் சட்டவிரோத நிதி மற்றும் ஊழல் குறித்து விசாரணை நடத்தினால் சிக்கி கொள்வார்கள். அவர் தப்பிப்பதற்கு, பிகே உதய் சிங் என்ற பப்பு சிங் மற்றும் மனோஜ் பாரதியை கட்சியின் தேசிய மற்றும் மாநிலத் தலைவர்களாக ஆக்கினார். இவ்வாறு அவர் கூறினார்.
பிரசாந்த் கிஷோர் பதிலடி
இது தொடர்பாக நிருபர்கள் கேள்விக்கு, ''அவர் விளையாடுகிறார். 4 நாட்களில் வழிக்கு வந்துவிடுவார். என்னை ஏழு ஜென்மத்திலும் சிறைக்கு அனுப்ப முடியாது. சஞ்சய் ஜெய்ஸ்வால் நடத்தும் பெட்ரோல் பங்கில் மாநகராட்சி வாகனங்கள் பேரில் போலி பில் தயாரிக்கப்படுவது மக்களுக்கு தெரியும். அனைத்து பெட்ரோல் பம்ப் உரிமையாளர்களும் இந்த மோசடி குறித்து புகார் அளித்திருந்தனர். இவ்வாறு பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025