சர்க்கரை நோய் வருவதற்கு அரிசி சாதம் காரணமா...?
21 தை 2021 வியாழன் 05:09 | பார்வைகள் : 9214
தினமும், அரிசி சாதம் சாப்பிடுவதால் அதிக அளவில் சர்க்கரை நோய் வருவதாக கூறப்படுவது தவறு. நாம் எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம். இன்று குக்கரில் வேகவைத்து அதாவது கஞ்சியை வடிக்காமல் சாதம் சாப்பிடுவதால் தான் நீரிழிவு ஏற்படுகிறது.
சாதத்தில் தண்ணீர் ஊற்றி, மறுநாள் காலையில் பழைய சோற்றை சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சி, வலிமை தருவதுடன் வயிற்றுக்கோளாறு, அல்சர், மூட்டு வலி, தோல் நோய்கள் ஆகியவை பாதிக்காமல் பாதுகாக்கிறது.
சாதம் வடித்த கஞ்சி சூடாக இருக்கும்போது சிறிது உப்பைப்போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம், ஆகியவை சரியாகும். ஆனால், கஞ்சியை ஆறிப்போய் குடித்தால் வாயுவை ஏற்படுத்தும்.
சாதம் உலையில் கொதிக்கும் போதே கஞ்சியை எடுத்துப் பருகினால் நீர்க்கடுப்பை நீக்கும். கொதிக்கக் கொதிக்க சாதத்தை சாப்பிடக்கூடாது. சாதத்தை மிதமான சூட்டிலேயே சாப்பிட வேண்டும். ஆனால் சாதத்தை சில்லென்று, ஆறிப்போய் சாப்பிட்டால் கீல் வாதம், மூட்டு வாதத்தை ஏற்படுத்தும்.
பழைய சோற்றில் தயிர் ஊற்றி சாப்பிடக்கூடாது. மோரைக் கடைந்து ஊற்றி சாப்பிட வேண்டும். சாதம் வெதுவெதுப்பாக இருக்கும் போது பசும்பால் ஊற்றி சாப்பிட்டால் தண்ணீர்த்தாகம் ஏற்படுவதும், பித்தம் உண்டாவதும் நீங்கும். பச்சரிசி சோற்றில் பால் சேர்த்துச் சாப்பிட வாதம், பித்தம் நீங்கும். மோர் சாதம் செரிமானக் கோளாறுகளை நீக்கி, வாதம், பித்தத்தை தணிக்கிறது. சம்பா சோறு வயிற்றுப்பொருமலுக்கு மிகவும் நல்லது.
வாழையிலையில் சாப்பிடுவதால் அதிலுள்ள துவர்ப்பு சத்து உடலில் சேர்ந்து நன்மை செய்கிறது. காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிட்டால் தொப்பையைக் கரைக்கும்.
முக்கியமாக சாப்பிடும் உணவுக்கேற்ற உடல் உழைப்பு இருப்பது அவசியம். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதை தெரிந்துக்கொள்வது நல்லது.